சினிமா
விளம்பரத்துக்காக மட்டமாய் பேசும் வனிதா..இளையராஜாவுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..

விளம்பரத்துக்காக மட்டமாய் பேசும் வனிதா..இளையராஜாவுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..
நடிகை வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடல் பயன்படுத்தியது குறித்து வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இதனையடுத்து வனிதா, இளையராஜா பற்றி காரசாரமாக விமர்சித்து பேசியிருந்தார்.இதுகுறித்து தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில், வனிதாவையும் சர்ச்சையையும் ஒன்றுக்கொண்டு பிரிக்க முடியாது. தான் எடுத்துள்ள படத்துக்கு பிரமோஷன் ஆகணும், இதற்காக எந்த நிலைமைக்கும் இறங்க தயாராகிவிட்டார்.ஒரு காலத்தில் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போக வாய்ப்பு வனிதாவுக்கு இருந்திருக்கலாம், வனிதாவே அன்று ஆசைப்பட்டும் இருந்திருக்கலாம். வனிதா அம்மா மஞ்சுளா விஜயகுமாரும் அப்படியொரு முடிவு செய்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த செய்தியை வனிதா திரித்து கூறுகிறார்.அதிலும் இளையராஜாவையே கல்யாணம் செய்வதாக இருந்தேன், காதலிக்கிறேன் என்று சொல்வது பொறுத்தமானதாக இருக்காது. ஏன் என்றால் இளையராஜா தன் மனைவியை , வனிதா பிறக்கும் முன்பே திருமணம் செய்தார். எனவே தன் படத்திற்கு விளம்பரம் வேண்டும் என்று வனிதா இப்படியெல்லாம் பேசி வருகிறார்.