தொழில்நுட்பம்
6,300mAh பேட்டரி, AI அம்சங்களுடன்… பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 80 லைட் அறிமுகம்!

6,300mAh பேட்டரி, AI அம்சங்களுடன்… பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 80 லைட் அறிமுகம்!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G) மாடலை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வெளியான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடலின் 4ஜி பதிப்பாகும். விலையை மலிவாக வைத்திருக்க சில அம்சங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், இது 90Hz டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் சிப்செட் போன்ற சிறப்பம்சங்களுடன், 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. குறிப்பாக, இந்த போன் 6,300mAh பெரிய பேட்டரியுடன் வருகிறது, இது வயர்டு, ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.இந்தியாவில் Realme Narzo 80 Lite 4G-ன் ஆரம்ப விலை 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.7,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6GB + 128GB வேரியண்ட் ரூ.8,299 விலையில் கிடைக்கிறது. Realme Narzo 80 Lite 4G வாங்குதலில் ரூ.700 வவுச்சர் வழங்கப்படும். 2 கான்ஃபிகரேஷன்களின் நிகர பயனுள்ள விலை முறையே ரூ. 6,599 மற்றும் ரூ.7,599 ஆகக் குறைகிறது. இது Obsidian Black, Beach Gold ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. ஜூலை 28 அன்று மதியம் 12 மணிக்கு (IST) ஃபிளாஷ் சேல் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். Realme Narzo 80 Lite 4G-ன் முதல் விற்பனை ஜூலை 31 அன்று மதியம் 12 மணிக்கு (IST) தொடங்கும்.Realme Narzo 80 Lite 4G சிறப்பம்சங்கள்:டூயல்-சிம் (நானோ+நானோ) ஆதரவு கொண்ட Realme Narzo 80 Lite 4G, ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 உடன் வருகிறது. இது 6.74-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) LCD திரையைக் கொண்டுள்ளது. இதில் 90Hz refresh rate, 180Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 563 nits peak brightness உள்ளது. ரியல்மி நிறுவனம் இந்த போனின் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் 90.4% என்றும், NTSC வண்ண வரம்பில் 83.5% வரை கவரேஜ் வழங்குவதாக கூறுகிறது.Realme Narzo 80 Lite 4G ஆனது ஆக்டா-கோர் Unisoc T7250 SoC உடன் 1.8GHz உச்ச க்ளாக் வேகத்துடன் இயங்குகிறது. இது Mali G57 MP1 GPU உடன், 6GB வரை ரேம் மற்றும் 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேம்-ஐ 16GB வரை மெய்நிகராக (virtually) விரிவாக்க முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.AI அம்சங்கள்: ரியல்மியின் இந்த புதிய போனில் AI பூஸ்ட் (AI Boost), AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் 2.0 (AI Call Noise Reduction 2.0) மற்றும் ஸ்மார்ட் டச் (Smart Touch) போன்ற பல AI-ஆதரவு அம்சங்கள் உள்ளன. இதில் இரட்டைப் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது f/2.2 துளையுடன் OV13B10 சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக, SC520CS சென்சார் மற்றும் f/2.2 துளையுடன் கூடிய 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதில் உள்ளது.4G, ப்ளூடூத் 5.2, வைஃபை 5, GPS மற்றும் USB Type-C ஆகியவை Realme Narzo 80 Lite 4G இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் அடங்கும். தூசி மற்றும் நீர் நுழைவிலிருந்து பாதுகாக்க IP54-ரேட்டிங் பெற்றது. மேலும், இந்த போன் military-grade shock resistance கூடிய ArmorShell பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இதன் பரிமாணங்கள் 167.20 x 76.60 x 7.94 மிமீ மற்றும் எடை 201g.Narzo 80 Lite 4G ஆனது 6,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 15W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 20.7 மணிநேரம் யூடியூப் வீடியோ பிளேபேக்கையும், 19 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டையும் வழங்கும்.