சினிமா
Dr. ராமதாஸ் வாழ்க்கையை படமாக எடுத்த சேரன்..! ஹீரோ யார் தெரியுமா.? வெளியான அப்டேட்.!

Dr. ராமதாஸ் வாழ்க்கையை படமாக எடுத்த சேரன்..! ஹீரோ யார் தெரியுமா.? வெளியான அப்டேட்.!
தமிழக அரசியலிலும், சமூக சேவையிலும் பல்லாண்டுகளாக தீவிரமாக பங்காற்றி வருபவர் பாமக நிறுவனர் எஸ். ராமதாஸ். அவருடைய அரசியல் பயணமும், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும், இளைஞர்களுக்கான முன்னோடியான ஆளுமையும் திரைப்படமாக்கப்பட உள்ளது.இப்படத்திற்கு ‘அய்யா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் வேடத்தில் நடிகர் ஆரி நடிக்கிறார். சமூக நீதிக்கும், விவசாயி உரிமைக்கும் குரல் கொடுத்து வந்த ஆரி, பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக மக்கள் மனதில் திகழ்ந்தார். அவரது தோற்றமும், அரசியல் பேசும் பாணியும், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது. தற்பொழுது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தை இயக்குநர் சேரன் இயக்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.