சினிமா
ஆடை வடிவமைப்பாளரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. ஜோடியின் புகைப்படம்..

ஆடை வடிவமைப்பாளரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. ஜோடியின் புகைப்படம்..
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சமையல் கலை வல்லுநர்களில் ஒருவர் ஆவார்.பிரபலங்களின் வீட்டில் விசேஷம் என்றால் அங்கு இவருடைய சமையல் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவருடைய திருமண வாழ்க்கையில் புயல் வீச துவங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருகிறார் என்றும் இருவரும் விவரையில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது மாதம்பட்டி ரெங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டா என்பவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணம் கோயிலில் மிகவும் சிம்பிளாக நடந்துள்ளது. தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளனர்.இதுகுறித்து ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா தம்பதிக்கு கூறி வருகிறார்கள்.