சினிமா
அதிகமா குடிப்பேன்..செத்துப்போயிடலாம்னு இருக்கும்!! மீண்டு வந்த நடிகர் பொன்னம்பலம் ஓபன் டாக்..

அதிகமா குடிப்பேன்..செத்துப்போயிடலாம்னு இருக்கும்!! மீண்டு வந்த நடிகர் பொன்னம்பலம் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் முரட்டு வில்லனாக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகர் பொன்னம்பலம், சமீபகாலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளா. குணமாக ஒருசில மாதங்களாகும் என்றும் உதவியவர்களுக்கு நன்றி என்றும் கூறி ஒரு ஆடியோ பதிவினை பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில், தனது வேதனைகளையும் வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான பார்வையையும் பகிர்ந்துள்ளார்.அதில், இந்த உலகத்தில் மிகக்கொடுமையான தண்டனை, எதிராளுக்குக்கூட வரக்குடாதுன்னா அது டயக்னோசிஸ் பண்றது தான். ஒருநாள் விட்டு ஒருநாள் 2 இன்ஜக்ஷன், பிளட் எல்லாம் எடுத்துடுவாங்க. 750 வாட்டி நானே ஊசி குத்திருக்கேன். அதுவும் ஒரே இடத்துல. கிட்டத்தட்ட 4 வருஷமா பண்ணிட்டு இருக்கேன்.உப்பு , கீரை வடை, தக்காளி, உருளைக்கிழங்குன்னு சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க, நல்லா சாப்பிட்டு பழகுனவன் கிட்னி ஃபெயிலியர் ஆனா செத்துப்போயிடலாம். ஆனால் இப்போ கிட்னி நல்லா ஆகிடுச்சி, எல்லாம் சாப்பிடலாம், அந்த ஸ்டேஜ்லதான் இருக்கேன். ஆனா ஒரு அளவு தான் சாப்பிடணும்.சாவு வரும் முன் ஆஸ்பிட்டலுக்கு போகக்கூடாது, சூடைடு பண்ணிக்கலாம், நல்லது, கெட்டதுன்னு ஆண்டவன் ரெண்டும் படைச்சிருக்கான். எதுவுமே அளவோடு இருந்தா நல்லது. நான் டிரிங்ஸ் நிறைய அடிப்பேன், யோகா பண்றதால போதை ஏறாது. நான் தண்ணி அடிச்சிட்டு வந்தேன்னு எங்கேயுமே தெரியாது என்று பொன்னம்பலம் பகிர்ந்துள்ளார்.