Connect with us

சினிமா

அன்றும் ஆசை… இன்றும் அதே தவறா? வடிவேலு மீண்டும் சர்ச்சையில்..!

Published

on

Loading

அன்றும் ஆசை… இன்றும் அதே தவறா? வடிவேலு மீண்டும் சர்ச்சையில்..!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை சம்ராட் என்றே புகழப்படும் வடிவேலு, ஒரு காலத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். எந்த ஒரு திரை நடிகனின் ட்ரோல்லாக இருந்தாலும், அதில் வடிவேலுவின் காமெடி perfectly match ஆகும் என்பதே நம்பிக்கை. ஒரு வேளை “தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழி இவருக்கும் பொருந்தும் போல உள்ளது.ஒருகாலத்தில் விஜயகாந்த் அரசியலில் இருந்தபோது, அவரது விரோதியாக செயல்பட்டு, கட்சிச் சுருக்கங்கள் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் வடிவேலு. கட்சியில் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பேசிப்பேசி தான் தானாகவே தற்காலிகமாக திரையுலகை விட்டு விலகினார். இதனால், தமிழ் சினிமாவில் இருந்த உறுதியான இடத்தை இழந்தார்.இப்போது மீண்டும் சில படங்கள் மூலம் திரையுலகிற்கு திரும்பியுள்ள வடிவேலு, தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலையில், அவரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது தேவையா என்ற கேள்வி எழுகிறது. “அன்றைக்கு விஜயகாந்த்… இன்றைக்கு விஜய்!” என மக்கள் பேசுகின்றனர்.சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களிலெல்லாம் “வடிவேலுவின் முன்னாள் அனுபவம் போதாதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்களால் மட்டுமே எப்போதும் மக்களிடையே இருப்பது சாத்தியமா? அல்லது நம் வாயால் நமக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர வேண்டிய நேரமா?

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன