பொழுதுபோக்கு
இந்தி ரசிகர்களுக்கு ஓகே… தமிழில் கிண்டல் செய்தார்கள்; நடிகை ஸ்ருதி ஹாசன் வேதனை

இந்தி ரசிகர்களுக்கு ஓகே… தமிழில் கிண்டல் செய்தார்கள்; நடிகை ஸ்ருதி ஹாசன் வேதனை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்துள்ள ”கூலி” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி கொண்டே இருக்கிறது. முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில், ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. கூலி படம் வருகிற 14-ம் தேதி முதல் உலகமெங்கும் திரையிடப்பட இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 181 இடங்களில் 438 காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதன் மதிப்பு ரு.2.5 கோடியை தண்டும் என்கிறார்கள். ரஜினியின் கூலி படத்துடன் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2 படமும் மோதுகிறது. எனினும், ரஜினியின் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனல் பறப்பதாக கூறப்படுகிறது. விக்ரம், லியோ உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகாராஜின் இயக்கத்தில் வெளியாகும் இந்த படத்தில் ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் பான் இந்தியா அளவில் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.இந்நிலையில், கூலி படத்தில் நடித்திருப்பது தொடர்பாக நடிகை ஸ்ருதி ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் தனது குரலை கிண்டல் செய்ததாக அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நடிகை ஸ்ருதி ஹாசன் பேசுகையில், “கூலி டத்தில் சத்யராஜ் சாரின் மகளாக நான் நடித்துள்ளேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. நான் ”இனிமேல்” மியூசிக் வீடியோவில் நடித்தபோது, லோகேஷ் கனகராஜ் ”கூலி” ஸ்கிரிப்டை என்னிடம் கூறினார். நான் நடித்துள்ள பிரீத்தி என்ற கதாபாத்திரம் வலிமையானதாகவும், பெண்மை நிறைந்ததாகவும் இருக்கும். கண்டிப்பாக இந்த ரோலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் இந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு நான் அவரது தீவிரமான ரசிகையாகி விட்டேன். ஆரம்பக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் என் குரலுக்காக பலர் என்னை கிண்டல் செய்தனர். இந்தி சினிமா ரசிகர்களுக்கு எனது டீப்பர் வாய்ஸ் பிடித்தது. ஏனெனில் ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் ஆகியோரின் தனித்துவமான குரல்கள் அவர்களுக்கு முன்பே பரிச்சயமாகி இருந்தது.