Connect with us

இலங்கை

இலங்கை மக்கள்தொகையில் தீவிர மாற்றம் ; அதிர்ச்சி அளித்த புள்ளிவிபரம்

Published

on

Loading

இலங்கை மக்கள்தொகையில் தீவிர மாற்றம் ; அதிர்ச்சி அளித்த புள்ளிவிபரம்

கடந்த மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றம், ஆண் மக்கள் தொகை வீதத்தில் நிலையான சரிவு மற்றும் அதற்கேற்ப பெண் மக்கள் தொகை வீதத்தில் அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் இலங்கை பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1995 இல் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 100.2 ஆண்கள் என்றிருந்த ஆண்-பெண் வீதம் தற்போது தலைகீழாக மாறி நாட்டில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 93.7 ஆண்கள் மட்டுமே இருப்பதாக தற்போதைய புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

Advertisement

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு சில திட்டங்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து கல்வித் துறைகளிலும் பெண் மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ள பல்கலைக்கழக அமைப்பிற்குள்ளும் கூட இந்த மாற்றம் தெளிவாகத் தெரிவதாகவும் கூறப்படுகிறது.

ஆண்களை விட பெண்கள் அதிக வீதத்தில் பணியிடங்களுக்கு நுழைவதற்கான வளர்ந்து வரும் போக்கும் காணாப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண் தொழிலாளர் கிடைப்பது தொடர்ந்து குறைந்து வருவதால், இந்த பாலின ஏற்றத்தாழ்வு பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வேலைவாய்ப்புத் துறைகளில் சவால்களுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இலங்கையின் ஆண் பணியாளர்களில் கணிசமான பகுதியினர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்றும், இது பிரச்சினையை மேலும் மோசமாக்குகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையே மக்கள்தொகைப் போக்கில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் நெருக்கடி மேலும் மோசமடைவதைத் தடுக்க வலுவான அரசாங்கத் தலையீட்டின் அவசரத் தேவையை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன