உலகம்
கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகளின் நவீன கண்டுபிடிப்பு – மின்னணு தோல்

கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகளின் நவீன கண்டுபிடிப்பு – மின்னணு தோல்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கியுள்ளனர்.
இந்த மென்மையான ஹைட்ரோஜெல் பொருள், தொட்டு பார்வை, அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி மற்றும் கீறல்களை கூட உணரக்கூடியது.
அவர்கள் இதனை சோதிக்க, குத்தியும், வெப்பத்தால் சூடாக்கியும், சுருளியால் வெட்டியும் பார்த்தனர். 17 லட்சம் தரவுகளை சேகரித்து, அவற்றை machine learning மூலம் பயிற்சி அளித்து, தொடுதல்களை அடையாளம் காணும் திறன் பெற்றுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு மனித போன்ற ரோபோக்கள் மற்றும் செயற்கை அங்கங்கள் உருவாக்கத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
எதிர்காலத்தில் ரோபோக்கள் இயற்கையான முறையில் சூழலுடனும், மனிதர்களுடனும் உறவாட இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக அமையும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை