இலங்கை
திருகோணமலையில் அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வீடு

திருகோணமலையில் அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வீடு
திருகோணமலையில் தம்பலகாமம் பகுதியில் நேற்று (26) வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவிலேயே அவ்வீட்டில் தீப்பற்றியுள்ளது.
தீ விபத்து தொடர்பில் திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உட்பட வீட்டில் உள்ள தளபாடங்கள், பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து முற்றாக நாசமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் இலங்கை மின்சார சபையினர் குறித்த வீட்டுக்குச் சென்று, மின்சாரம் தொடர்பில் பரிசோதித்துள்ளனர்.
மின்கசிவால் தீ பரவியதா அல்லது திட்டமிட்டு யாரேனும் தீ வைத்தனரா? என்பது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.