இலங்கை
தென்னிலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து

தென்னிலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து
தெற்கு கடற்பரப்பில் மிரிஸ்ஸ அருகே இன்று (27) விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து இரண்டு மீனவர்களை கரையோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.
மிரிஸ்ஸ, பண்டாரமுல்லையில் இருந்து 35 மற்றும் 63 வயதுடைய மீனவர்கள் இன்றையதினம் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் அறிந்தவுடன் இலங்கை கரையோர காவல்படை CG 201 என்ற கரையோர ரோந்துப் படகை அந்த இடத்திற்கு அனுப்பியது.
பொதுமக்களின் உதவியுடன் மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்புக் குழுவினர் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.