இலங்கை
தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் உறுதி? நாடாளுமன்ற அறிவிப்பு

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் உறுதி? நாடாளுமன்ற அறிவிப்பு
காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை முழுமையாக நீக்கும் பிரேரணை மீதான விவாதம் ஓகஸ்ட் (05) நடைபெறும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி தொடர்புடைய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அவர்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுன தொடர்புடைய பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட, வராத எம்.பி.க்கள் உட்பட அனைத்து எம்.பி.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (113) வாக்களிக்க வேண்டும்.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி, தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவார்.