சினிமா
பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி!! 2025 குடும்பங்களை சந்தோஷப்படுத்திய 6 படங்கள்..

பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி!! 2025 குடும்பங்களை சந்தோஷப்படுத்திய 6 படங்கள்..
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் தலைவன் தலைவி. நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, தீபா சங்கர், ரோஷினி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.நேற்று ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸான இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி குடும்பங்களை சந்தோஷப்படுத்திய 6 படங்கள் என்ன என்ன என்று பார்ப்போம்..நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைதொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாமன் படத்தில் குடும்பத்துடன் மக்கள் பார்த்து கொண்டாடினர். தாய்மாமன் உறவு எப்படிப்பட்டது என்பதை வெளிக்காட்டும் படமாக மாமன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஆதரவு பெற்ற படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. புதுமுக இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கிட்டத்தட்ட சுமார் ரூ. 91 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.சித்தார்த், சரத்குமார் நடிப்பில் குடும்பத்தினர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 3BHK.இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பறந்து போ. அப்பா, மகன் இடையேயான உறவை அற்புதமாக வெளிப்படுத்தும் வண்ணம் இப்படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படங்களை தொடர்ந்து கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது தலைவன் தலைவி. ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாகி தற்போது அமோக வரவேற்பை பெற்று வருகிறது.