இலங்கை
பெண்களை இலக்குவைத்து கொள்ளையடித்த இருவர் கைது!

பெண்களை இலக்குவைத்து கொள்ளையடித்த இருவர் கைது!
பெண்களின் கைப்பைகள் மற்றும் கைப்பேசிகளை இலக்காகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் திருட்டு சம்பவங்களுக்காக பிலியந்தலைப் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறைக்காக வந்துள்ள இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
மற்றைய இளைஞர், பாணந்துறை பகுதியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து 5 நவீன மற்றும் 15 ஸ்மார்ட் கைப்பேசிகள், போலி எண் தகடு கொண்ட மோட்டார் சைக்கிள், முகமூடியுடன், ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ரூ. 25 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், நாள் ஒன்றுக்கு 20 பெக்கட் போதைப்பொருட்களை உட்கொள்வதும் விசாரணைகல் தெரியவந்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் நபர்களையும் முகமூடியுடன் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் திரிவோரையம் இலக்குவைத்து விசேட சோதனையின் நடவடிக்கையின் போதே இருவரும் கைது செய்யப்பட்டனர்.