இலங்கை
மன்னாரில் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள்!

மன்னாரில் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள்!
மன்னார் மாவட்டத்துக்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள் நேற்று பொது நிர்வாக அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மனோகரன் பிரதீப் மேலதிக அரச அதிபராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, 2013 தொடக்கம் 2015 வரை உதவி பிரதேச செயலாளராக மாத்தளை மாவட்டம், ரத்தோட்டை பிரதேச செயலகத்திலும், 2015 முதல் 2020 வரை உதவி பிரதேச செயலாளராக கண்டாவளைப் பிரதேச செயலகத்திலும், 2020 தொடக்கம் பிரதேச செயலாளராக மன்னாரிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
இதேபோன்று மேலதிக அரச அதிபராக (காணி) கீ.பீட் நிஜாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2013 இல் இருந்து 2020-08-09 வரை திருகோணமலை உதவி காணி ஆணையாராகவும் (மாகாணங்களுக்கு இடைப்பட்டது), 2020-08-10 இருந்து 2021-01-19 வரை முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும், 2021-01-20 இருந்து 2021-02-28 வரை மன்னாரில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், 2021-03-01 முதல் மடுப் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.