Connect with us

பொழுதுபோக்கு

மாநகரம் ஸ்ரீ கேரக்டர் நான்தான்; வங்கி ஊழியர் டூ முன்னணி இயக்குனர்; வாழ்க்கை அனுபவம் சொன்ன லோகேஷ்!

Published

on

maanagaram

Loading

மாநகரம் ஸ்ரீ கேரக்டர் நான்தான்; வங்கி ஊழியர் டூ முன்னணி இயக்குனர்; வாழ்க்கை அனுபவம் சொன்ன லோகேஷ்!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சினிமாவுக்கான அவரது பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கும். கிணத்துக்கடவு எனும் சிறிய கிராமத்தில் இருந்து எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல், இன்று கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள லோகேஷின் கதை, கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.லோகேஷ் கனகராஜ், பேருந்துக் கண்டக்டரின் மகன். அவரது தாயார் இல்லத்தரசி. தனது குடும்பத்தைப் பற்றி அவர் அதிகம் வெளிப்படுத்த விரும்புவதில்லை என்றாலும், சிறிய கடையில் இருந்து மெல்ல மெல்ல நிதி நிலைமையை மேம்படுத்திய நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. “எனக்கு என்ன வேணும்கிறது எனக்கே தெரியாது” என்று கோபிநாத் நடத்திய நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகக் கூறியிருந்தார். கோயம்புத்தூரில் உள்ள PSG கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்தது, பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் MBA முடித்தத அவரது கல்விப் பயணம், சினிமாவை நோக்கி நேரடியான பாதையில் அமையவில்லை.சினிமா துறைக்கு வருவதற்கு முன், லோகேஷ் வங்கியில் பணியாற்றியுள்ளார். கோயம்புத்தூருக்கு வந்ததே தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாகவும், பின்னர் சென்னை போன்ற மெட்ரோ நகரத்திற்கு வந்தபோது, “எதுவுமே தெரியாம இருந்துட்டோமேங்கிற மாதிரி ஒரு பீல்தான் இருந்தது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். தனது மாநகரம் படத்தில் வரும் ஸ்ரீ கதாபாத்திரத்தைப் போலவே, தானும் நகரத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரண்டு போனதாக லோகேஷ் கூறினார். இந்தத் தனிப்பட்ட அனுபவமே தனது திரைப்படங்களில் வரும் எதார்த்தமான சித்தரிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.வங்கிப் பணியில் இருந்தபோதே, தனது ஆர்வம் சினிமாவை நோக்கித் திரும்பியது. குறும்படப் போட்டிகள் சினிமாவுக்குள் கொண்டு சென்றன. சினிமாவுக்கு வருபவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளிலேயே நாடகம், மேடைப் பேச்சு போன்ற கலைத் தொடர்புகள் இருக்கும். ஆனால் தனக்கு அப்படிப்பட்ட பின்னணி இல்லை. இதுவே எனது பயணத்தை மேலும் தனித்துவமாக்கியது என்று லோகேஷ் குறிப்பிட்டார்.”மாநகரம்”, “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அவரது திரைப்படங்கள் தனித்துவமான திரைக்கதை, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்களுக்காகப் பாராட்டப்படுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன