சினிமா
மாரீசன் படம் எப்படி இருக்கு!! முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

மாரீசன் படம் எப்படி இருக்கு!! முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
இயக்குநர் சதீஷ் சங்கர் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு, நடிகை பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன். நேற்று ஜூலை 25 ஆம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வடிவேலு வேலாயுதம் என்ற மறதி நோய் கொண்ட கதாபாத்திரத்திலும், பகத் பாசில் தயா என்ற ரோலிலும் நடித்துள்ளனர்.படத்தின் கதையில், ஒரு நாள், ஏடிஎம்மில் பணம் எடுக்கச்செல்லும் வேலாயுதம், PIN எண்ணை மறந்துவிடுவார். அப்போது அங்கு வரும் திருடன் தயா, வேலாயுதமிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து எப்படியாவது அதை திருட முடிவு செய்து, அவரை பைக்கில் அழைத்துச்செல்கிறார்.இந்த மர்மமான பயணத்தில் என்ன ஆனது? வடிவேலுவிடமிருந்து பகத் பாசில் பணத்தை திருடினாரா? இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதையாக இருக்கிறது. முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டா பாதி சற்று தொய்வாக இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.மாரீசன் படம் ரிலீஸான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் வெறும் ரூ. 75 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால் அதே நாளில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் ரிலீஸான தலைவன் தலைவி முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ. 4.15 கோடி வசூலித்திருக்கிறது.