Connect with us

இலங்கை

வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி ; 30 ஆண்டுகளுக்குப் பிறகு பின் கண்டுபிடிப்பு

Published

on

Loading

வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி ; 30 ஆண்டுகளுக்குப் பிறகு பின் கண்டுபிடிப்பு

இலங்கைப் பெண் ஒருவர், குவைட் நாட்டவரொருவரை ஏமாற்றி, போலியான கர்ப்பம் ஊடாக சட்டவிரோதமாக அந்த நாட்டின் குடியுரிமை பெற்று மோசடி செய்ததை சுமார் 30 வருடங்களின் பின்னர் குவைட் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொஸ்தா எனப்படும் குறித்த பெண், 1992 ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர் விசாவில் முதன்முதலில் குவைட்டுக்கு சென்றுள்ளார்.

Advertisement

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், குற்றச்சாட்டொன்றில் அவர் நாடு கடத்தப்பட்டார்.

இருப்பினும், 1996 ஆம் ஆண்டில், அவர் ஒரு புதிய பெயர் மற்றும் கடவுச்சீட்டின் கீழ் மீண்டும் குவைட் நுழைந்துள்ளார்.

அவர் அங்குச் சென்ற சிறிது நாட்களிலேயே குவைட் நாட்டவரான டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை மணந்துள்ளார்.

Advertisement

இந்தநிலையில், குவைட் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ், வெளிநாட்டுப் பெண் ஒருவர் குவைட் ஆணைத் திருமணம் செய்து, அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, குறித்த பெண் தமது கணவரை, தாம் கர்ப்பமாக இருப்பதாக நம்ப வைத்துள்ளார்.

இந்தநிலையில் உண்மையிலேயே கர்ப்பம் தரித்திருந்த மற்றுமொரு இலங்கை பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி, தமது பெயர் மற்றும் அடையாளத்தை பயன்படுத்தி வைத்தியசாலையில் குழந்தையை பிரசவிக்க வழிசெய்துள்ளார்.

Advertisement

அதன்படி, அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையை, கொஸ்தா என்ற குறித்த பெண், அவரது குவைட் கணவரின் மகள் என்று பதிவுசெய்துள்ளார்.

அதனூடாக 2000 ஆம் ஆண்டில், அந்த பெண் குவைட் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அவர் அதிகாரப்பூர்வமாக குவைட் பிரஜையானார்.

Advertisement

இந்தநிலையில், 2008 ஆம் ஆண்டில், கொஸ்தா தமது கணவரை விவாகரத்து செய்ததுடன், தமக்கு பிறந்த குழந்தை அவருடையது அல்ல என்று ஒப்புக்கொண்டார்.

இது குறித்து விவாகரத்தான அவரது கணவர் அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், அந்த நேரத்தில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டிலேயே அவர் முறையாக வழக்கு தாக்கல் செய்தார்.

Advertisement

இது அந்த நாட்டின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு வழிவகுத்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர், மரபணு சோதனையில் குறித்த குழந்தை கொஸ்தாவுடனோ அல்லது அவரது முன்னாள் கணவருடனோ உயிரியல் ரீதியாக தொடர்புடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டில், குடியுரிமை விவகாரங்களுக்கான உயரிய குழு, ஏமாற்றுதல், போலி தகவல் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் குவைட் குடியுரிமையை மோசடியாகப் பெற்றமை தொடர்பில் கொஸ்தா என்ற குறித்த பெண் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

Advertisement

அதற்கமைய, அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டதுடன், தற்போது வயது வந்த அவரது மகளின் குடியுரிமையும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, அதிகாரிகள் குறித்த மகளின் உண்மையான தாயை இலங்கைப் பெண் என்று அடையாளம் கண்டதுடன், அவர் பிரசவத்தின் போது குவைத்தில் இருந்த போதிலும் பின்னர் நாடு கடத்தப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது, கடந்த காலங்களில் குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை குவைட் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன