Connect with us

பொழுதுபோக்கு

வேலன் சீரியலில் கடவுள் முருகன்; இந்த சிறுமி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? அதே ஸ்மைல்!

Published

on

Velan Serial Murugan

Loading

வேலன் சீரியலில் கடவுள் முருகன்; இந்த சிறுமி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? அதே ஸ்மைல்!

சினிமா சின்னத்திரை எதுவாக இருந்தாலும், குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரிய வாய்ப்புகள் இருக்கும். ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் நடிகைகள், வளர்ந்து பெரியவர்களாக ஆனவுடன், திரைப்படங்களில் ஹீரோயின் அல்லது முக்கிய கேரக்டர்களில் நடிக்கும்போது அவர் தானா இவர் என்று கேட்பார்கள். அதே சமயம், குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு, அதன்பிறகு படங்களில் நடிக்காத நடிகர் நடிகைகளும் இருக்கிறார்கள்.அந்த வகையிலான நட்சத்திரங்கள், குழந்தையாக நடித்த படங்களை பார்க்கும்போது இவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி பலரின் மனதில் எழுவது வழக்கம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சில வெற்றிப்படங்களிலும் சின்னத்திரை சீரியலில் முருகன் வேடத்தில் நடித்த சிறுமி ஒருவர் தற்போது வளர்ந்துவிட்டார். ஆனால் திரைப்படங்களில் நடிக்காத அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை ப்ரஹர்ஷிதா.A post shared by Saregama Tv Shows Tamil (@saregamatvshows_)சன் டிவியில் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் வேலன். கடவுள் முருகனின் பெருமைகளை எடுத்துச்சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியலில், நடிகை சீதா, பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி, எம்.என்.நம்பியார், வியட்நாம் வீடு சுந்தரம், தவக்களை சிட்டி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து வேலன் மற்றும் கடவுள் முருகன் என இரு வேடங்களில் நடித்தவர் தான் நடிகை ப்ரஹர்ஷிதா.குழந்தை நட்சத்திரமாக இந்த சீரியலில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த சீரியல் டிவியில் ஒளிபரப்பாகும்போது உண்மையான கடவுள் முருகன் தான் என்று இவரை பலரும் நினைத்துள்ளனர். அந்த அளவிற்கு முருகனின் அவதாரமாக கருத்தப்பட்ட ப்ரஹர்ஷிதா முருகன் வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். இதன் பிறகு, ராஜ ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்ட சீரியல்களிலும் ப்ரஹர்ஷிதா நடித்திருந்தார்.A post shared by Praharshetha (@simply_bommi)இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற குட்டி பாப்பா கேரக்டரில் ப்ரஹர்ஷிதா நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் ‘அத்திந்தோம் திந்தியம்’ பாடலில் ப்ரஹர்ஷிதாவின் நடிப்பும், அதற்கான அசைவுகளும் பெரிய கவனம் ஈர்த்திருந்தது. இதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிய ப்ரஹர்ஷிதா தற்போது வளர்ந்துவிட்டார். ஒரு நேர்காணல் ஒன்றில் இவர் பங்கேற்றபோது, ஒரு வயதான பாட்டி இவரை முருகன் என்று நினைத்துக்கொண்டு தொலைபேசியில் பேசிய வீடியோவை ப்ரஹர்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன