பொழுதுபோக்கு
40 வயதில் ரொமான்ஸ் பண்ண கூடாதா? அப்படினா நீங்க எதுமே பண்ண கூடாது; வனிதாவுக்கு ஆதரவாக வந்த ஜோவிகா!

40 வயதில் ரொமான்ஸ் பண்ண கூடாதா? அப்படினா நீங்க எதுமே பண்ண கூடாது; வனிதாவுக்கு ஆதரவாக வந்த ஜோவிகா!
வனிதா விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கடுமையாக விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், வயது வந்தோருக்கான படமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்திருநதனர். இது குறித்து வனிதா தனது மகளுடன் பதில் அளித்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார், கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபலமாக வனிதாவின் மகள் ஜோவிகா மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைபடத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை வனிதாவே இயக்கியிருந் நிலையில், ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமன் ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை, வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்தார்,இந்த படம் கடந்த ஜூலை 11 ம் தேதி வெளியாகி கடுமையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. குறிப்பாக அடல்ஸ் ஒன்லி படம் மாதிரி இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வனிதா கடும் அதிர்ச்சியான நிலையில், இளையராஜா குடும்பம் குறித்து பல தகவல்களை கூறியிருந்தார்,இதனிடையே யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய வனிதா, 40 வயதுக்கு மேல் என்ன இவங்களுக்கு ரொமான்ஸ் தேவை என்று கமெண்ட் போடுவார்கள். 20 வயதில் ஒருவரை திருமணம் செய்தால் 40 வயதில் அவரிடம் ரொமான்ஸ் பண்ண கூடாதா? உங்கள் உணர்ச்சிகளை நீங்களே கொன்றுவிடுவீர்களா? இதெல்லாம் ஒரு முட்டாள் தனம் என்று வனிதா கூறியுள்ளர். அதேபோல் ஜோவிகா பேசும்போது, இதெல்லாம் பார்த்தா 30-40 வயதிற்கு மேல் எதுவுமே செய்ய கூடாது. சிரிக்க, அழுக, கோபம் எரிச்சல் என எதுவுமே வர கூடாது.எந்த எமோஷன்ஷயும் பீல் பண்ண கூடாது. காதல் என்பது ஒரு எமோஷன். பல எமோஷ்னகளில் காதல் என்பதும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் அதை செய்ய கூடாது என்றால் நீங்கள் எதுவுமே செய்யக்கூடாது. ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று ஜோவிகா கூறியுள்ளார்.