சினிமா
இசை மழையில் நனைய தயாரா.!! அனிருத்தின் மாபெரும் கச்சேரி எப்போது தெரியுமா.?

இசை மழையில் நனைய தயாரா.!! அனிருத்தின் மாபெரும் கச்சேரி எப்போது தெரியுமா.?
இந்த தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளராக மின்னும் அனிருத் ரவிச்சந்தர் தனது இசை நிகழ்ச்சியின் புதிய தேதியை அறிவித்து, ரசிகர்களிடையே மீண்டும் ஒருமுறை எதிர்பார்ப்பை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.கொஞ்ச நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த இசை விழா, திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 23ம் தேதி, கூவத்தூர் பகுதியில் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, அனிருத் இசை நிகழ்ச்சி ஜூலை 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக டிக்கெட்டுகளை வாங்கிய நிலை உருவானது. எனினும் நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, தொழில்நுட்ப சவால்கள் காரணமாக நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, பெரும் மகிழ்ச்சியாக மாறியுள்ளது.