சினிமா
இரண்டு முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் விஜய் டிவி.. வருத்தத்தில் ரசிகர்கள்

இரண்டு முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் விஜய் டிவி.. வருத்தத்தில் ரசிகர்கள்
விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் என்றிருந்த நிலை தற்போது மாறி சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில், விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது.அதில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர், பல வருடங்களாக மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் தொடர்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பாகப்போகிறது.அதை தொடர்ந்து, தங்கமகள் என்ற மற்றொரு தொடரும் இரண்டு வாரங்களில் முடிக்கப்படுவதாக ப்ரோமோ வெளியிட்டு விஜய் டிவி அறிவித்துள்ளது.இந்த இரண்டு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் பெற்ற தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.