இலங்கை
இரும்புக் கம்பியை காட்டி சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்

இரும்புக் கம்பியை காட்டி சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்
கண்டி, ஹந்தானை பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு கும்பலொன்று ஹந்தானை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகளது பஸ் வண்டியினுள் பிரவேசித்து அதிலிருந்த சிறுவர்கள் உட்பட பலரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அது தொடர்பில் , கண்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் படியே மேற்படி சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
குழுவின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேக நபர் இரும்புக் கம்பியொன்றை காட்டி பயணிகளை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அநுராதபுரம் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் முச்சக்கரவண்டி சாரதி என்றும் தெரிவிக்கப்படும் நிலையில், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.