சினிமா
இளையராஜா மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.! காப்புரிமை விவகாரத்தால் எழுந்த சர்ச்சை.!

இளையராஜா மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.! காப்புரிமை விவகாரத்தால் எழுந்த சர்ச்சை.!
இந்திய இசை உலகின் சிகரமாக திகழும் இசையமைப்பாளர் இளையராஜா, அவரது இசை உரிமைகள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடனான வழக்குப் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது, இது இந்த வழக்கு தற்பொழுது முக்கிய திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.இந்த வழக்கு தொடங்கியதற்கான பின்னணியாக, சோனி மியூசிக் நிறுவனம், இளையராஜாவின் சொந்த நிறுவனமான ‘இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ (IMMP) மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கில், இளையராஜா இசையமைத்த 536 ஆல்பங்களில் 228 ஆல்பங்கள், சோனியின் காப்புரிமையில் இருக்கும் போது, IMMP நிறுவனத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதாக, மற்றும் அதன் ஒளிபரப்பும் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சோனி நிறுவனம் இந்த உரிமை மீறலால் சுமார் 1.5 கோடி நஷ்ட ஈடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. ஆனால், இளையராஜா தரப்பில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தற்பொழுது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.