இலங்கை
கிளிநொச்சி பல்கலைக்கழகத்தில் உயிரிழப்பு ; பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி பல்கலைக்கழகத்தில் உயிரிழப்பு ; பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட தடவியல் பொலிஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தர்மசீலன் ரகுராஜ் எனும் 34 வயதுடைய காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிபதி அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைப்படவுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.