இலங்கை
கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் செல்வராசா காலமானார்!

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் செல்வராசா காலமானார்!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(27) காலை இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (28) காலை அஞ்சலிக்காக கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.