இலங்கை
ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும்; அமைச்சர் லால்கந்த வலியுறுத்து!

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும்; அமைச்சர் லால்கந்த வலியுறுத்து!
ஜனாதிபதி அநுரவின் பாது காப்பு உயர்த்தப்படவேண்டும். இது மிகவும் அவசியமானது என்று விவசாய அமைச்சர் லால்கந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில்
அவர் மேலும் தெரிவித்ததாவது:- முன்னாள் ஜனாதிபதிகள் உச் சக்கட்டப் பாதுகாப்புடன் இருந்தனர். தற்போதைய ஜனாதிபதி அநுர மிகவும் குறைந்தளவு பாதுகாப்புடன் வலம்வருகின்றார் என்று பலரும் கருத்துத் தெரிவிப்பதைப் பார்க்கின்றேன். உண்மையில் இந்தக் கருத்துகள் முட்டாள்தனமானவை. என்னைப் பொறுத்தவரை ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். ஜனாதிபதி பயணிக்கும்போது அவருடன் ஒருகுழு செல்லவேண்டியது அவசியம். இது தவிர்க்கமுடியாத ஒன்று. ஜனாதிபதிக்கு நிச்சயம் அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே, குறைவான பாதுகாப்பை வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன?
தனக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதை தோழர் அநுரகுமாரவும் விரும்பமாட்டார். ஆனால், அவருக்கு ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்பதே எனது கருத்தும் நிலைப்பாடுமாகும் – என்றார்.