சினிமா
டீசரே இப்டி இருந்தால் படம் எப்புடி இருக்கும்.? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “காந்தா” படம்.!

டீசரே இப்டி இருந்தால் படம் எப்புடி இருக்கும்.? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “காந்தா” படம்.!
மலையாள சினிமா மற்றும் தமிழ் ரசிகர்களிடையே அதிகளவான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் துல்கர் சல்மான் தனது பிறந்த நாளை (ஜூலை 28) முன்னிட்டு படக்குழு அவருக்கு சூப்பர் சப்பிறைஸ் கொடுத்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் புதிய திரைப்படமான காந்தாவின் டீசர், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகியதுடன், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகம் உருவாகி இருக்கிறது.துல்கர் சல்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவரது படக்குழு ஒரு சிறப்புப் பரிசாக ‘காந்தா’ படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது . டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.இந்த டீசர் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, சினிமா விமர்சகர்களிடமும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரலான டீசர் இதோ..