Connect with us

இலங்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published

on

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 ஒரே நேரத்​தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்​டா​லின், தமிழக் வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகம் மற்​றும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோதனை​யில் வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி என தெரிய​வந்​தது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

Advertisement

சென்னை எழும்​பூரில் செயல்​பட்டு வரும் மாநில பொலிஸ் கட்டுப்​பாட்டு அறைக்கு நேற்று அதி​காலை வந்த தொலைபேசி அழைப்பில் , எதிர்முனையில் பேசிய நபர் ‘முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு வைத்​துள்​ளேன்.

அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும். முடிந்​தால் தடுத்துப் பாருங்​கள்’ எனக் கூறி இணைப்பை துண்​டித்​தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்​டுப்​பாட்டு அறை பொலிஸார் உடனடி​யாக உயர் பொலிஸ் அதி​காரி​களுக்கு தகவல் தெரிவித்​தனர்.

Advertisement

இதையடுத்​து, தேனாம்​பேட்டை பொலிஸார் , வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாயுடன் ஆழ்​வார்​பேட்டை சித்​தரஞ்​சன் வீதி​யில் உள்ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு மற்​றும் வீட்டு வளாகம் முழுவதும் மெட்​டல் டிடெக்​டர் கருவி மூலம் சோதித்து பார்த்​தனர்.

பலமணி நேர சோதனைக்கு பின்​னர் சந்​தேகப்​படும்​படி எந்த பொருள்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதையடுத்​து, வெடிகுண்டு மிரட்​டல் புரளி என தெரிய​வந்​தது. மிரட்​டல் விடுத்த நபரை தனிப்​படை அமைத்து பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதே​போல், நேற்று காலை பொலிஸ் கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் த.வெ.க. தலை​வர் நடிகர் விஜய் வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக மிரட்​டல் விடுத்து தொலைபேசி இணைப்பை துண்​டித்​தார்.

Advertisement

இதையடுத்​து, நீலாங்​கரை பொலிஸார் விஜய் வீட்​டுக்கு வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களு​டன் சென்று சோதனை மேற்​கொண்​டபோது அங்​கும் சந்​தேகப்​படும்​படி எந்த வெடிபொருள்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன