இலங்கை
தொடருந்து ஓட்டுநர்களின் பணிப்புறக்கணிப்ப்பு போராட்டம்!

தொடருந்து ஓட்டுநர்களின் பணிப்புறக்கணிப்ப்பு போராட்டம்!
தொடருந்து ஓட்டுநர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கற்ற சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாததால் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடருந்துகளும் சேவையில் ஈடுபடாது என்றும் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.