இலங்கை
நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறையா? வெளியான தகவல்

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறையா? வெளியான தகவல்
நாட்டில் மிகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மருந்து பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80 முதல் 90 சதவீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.