சினிமா
நெப்போலியன் மருமகளை இப்டி வைச்சு தாங்குறாரே.? வைரலான வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!

நெப்போலியன் மருமகளை இப்டி வைச்சு தாங்குறாரே.? வைரலான வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் அவர், சமீபமாக தனது மகன் தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியிருந்தார். கடந்த ஆண்டு (2024) ஜப்பானில் பாரம்பரிய முறையில் நடந்த இந்த திருமணத்தில், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கியமானவர்களின் பங்கேற்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், தனது நீண்ட நாள் காதலியான அக்ஷயாவை ஜப்பானில் பாரம்பரிய தமிழ் முறைப்படி மணமுடித்தார். திருமண விழா வெகு கோலாகலமாக நடைபெற்றதோடு, பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் இணைந்திருந்தனர்.திருமண நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து கப்பல் பயணத்தின் மூலம் பல நாடுகளுக்கான சுற்றுலாவாக சென்றிருந்தனர். திருமணமாகி 10 மாதங்களுக்குப் பிறகு, மருமகள் அக்ஷயா தனது சொந்த வீட்டிற்கு (நெப்போலியனின் வீடு) முதன் முறையாக அடியெடுத்துள்ளார்.இதை ஒரு சிறப்பு தருணமாக நடிகர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர் முழு ஊரையும் கூட்டி மிகப்பெரிய வரவேற்பு நிகழ்வாக மாற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.