இலங்கை
பட்டம் விட்டு விளையாட வேண்டாம்; விமானப்படையினர் கோரிக்கை

பட்டம் விட்டு விளையாட வேண்டாம்; விமானப்படையினர் கோரிக்கை
இலங்கையில் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என இலங்கை விமானப்படையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதால் விமான விபத்துக்குள் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் எனவும் இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷவும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.