இலங்கை
பாரம் தூக்கியின் செயலிழப்பு – ஒருவர் பலி!

பாரம் தூக்கியின் செயலிழப்பு – ஒருவர் பலி!
கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரம் தூக்கியின் பிரேக்குகள் சரியாக செயல்படாமையினால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரைணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.