இலங்கை
‘மக்களுடன் ஊராட்சி’ நடமாடும் சேவை

‘மக்களுடன் ஊராட்சி’ நடமாடும் சேவை
மக்களுடன் ஊராட்சி என்ற உயரிய நோக்கத்துக்காக மக்களுக்கான சேவையை மக்களிடம் சென்று வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட் டுள்ள நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது என்று வவுனியா தெற்குப் தமிழ்ப்பிரதேசசபையின் தவிசாளர் பா. பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை கந்தபுரம் வட்டாரத்துக்குட்பட்ட தோணிக்கல் ஆர்.டி.எஸ். மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் பி.ப.3 மணி வரையில் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. எதிர்காலத்தில் ஏனைய வட்டாரங்களுக்கும் இந்த நடமாடும் சேவையை விஸ்தரிக்கவுள்ளோம்.
குறித்த சேவையில் விளம்பரப்பலகைக் கட்டணம், சோலைவரி, ஆதனப்பெயர் மாற்ற ஆலோசனைகள், எல்லைக் கோட்டுச் சான்றிதழ் சேவை, வியாபார உரிமம். வியாபார வரி. வியாபார பெயர்ப்பதிவு. வழி அனுமதிப்பத்திர ஆலோசனைகள். கட்டட அனுமதி ஆலோசனைகள், கழிவகற்றல் சேவை.வீதி விளக்குக் கோரிக்கைகள், ஆயுள்வேத மருத்துவ சேவை, நூலக நடமாடும் சேவையும் அங்கத்துவப் படிவம் வழங்கலும், முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளல், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் பெறல் உள்ளிட்ட மேலும் பல சேவைகளை வட்டாரத்துக்குட்பட்ட பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.