இலங்கை
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி!

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொணடுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முகிதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கு இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, அநுரகுமார மாலைதீவு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
மேலும் ஜனாதிபதியின் மாலைதீவுக்கான அரசு முறைப் பயணம் இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஒரு வணிக மன்றத்தில் உரையாற்றவும், இலங்கை புலம்பெயர்ந்தோரை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் குழுவும் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.