இலங்கை
முட்டை விலை குறித்து மக்கள் குற்றச்சாட்டு!

முட்டை விலை குறித்து மக்கள் குற்றச்சாட்டு!
நாட்டில் நாளாந்த முட்டை உற்பத்தி 15 மில்லியனாக அதிகரித்ததன் காரணமாக முட்டைகளின் விலை குறைந்துள்ளது
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முட்டை விலை குறைந்திருந்தாலும், முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டியின் விலை முன்பு போலவே இருப்பதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒரு முட்டையின் விலை 45 முதல் 50 ரூபாய் வரை இருந்தபோது, ஒரு முட்டை ரொட்டியின் விலையை 125 முதல் 130 ரூபாய் வரை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், இப்போது ஒரு முட்டையின் விலை குறைந்துள்ள போதும், முட்டை ரொட்டி இன்னும் அதே விலையில் விற்கப்படுகிறது.
முட்டை விலை குறைந்ததால் கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அதுவும் குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.