டி.வி
முதல் திருமண உண்மை… 2-வது திருமணத்திற்கு பாதுகாப்பு தீவிரம்; ஜீ தமிழில் கல்யாண கலாட்டா!

முதல் திருமண உண்மை… 2-வது திருமணத்திற்கு பாதுகாப்பு தீவிரம்; ஜீ தமிழில் கல்யாண கலாட்டா!
மாலதி டீச்சருக்கு நடந்த கத்திக்குத்து.. கண்கொத்தி பாம்பாக மாறிய சண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வெங்கடேசன் அறிவழகன் கொல்ல வரும் விஷயம் சண்முகத்திற்கு தெரியவந்த நிலையில் இன்று, கல்யாண மண்டபத்தில் அறிவழகன் தனது மனதில் இருக்கும் காதலை ரத்னாவிடம் வெளிப்படுத்த எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து சிவபாலன் வெளியே செல்ல கௌதமின் ஆட்கள் சிவபாலனால் கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என அவனை கடத்தி விடுகின்றனர்.வைஜெயந்தி இந்த கல்யாணத்தில் பிரச்சனை வரலாம் என்பதால் உஷாராக இருக்கும்படி கௌதமுக்கு அறிவுரை சொல்கிறாள். மேலும் சண்முகம் அறிவழகனின் அப்பாவுக்கு கடன் வாங்கி விலை உயர்ந்த மோதிரத்தை வாங்கிக் கொடுக்க அறிவழகன் இதெல்லாம் எதுக்கு என்று கேள்வி கேட்க சண்முகம் பரவால்ல இருக்கட்டும் என்று சொல்கிறான்.மேலும் சண்முகம் வெட்டுக்கிளி ஆகியோர் வெங்கடேஷ் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதால் கண்கொத்தி பாம்பாக காவல் காக்க தொடங்குகின்றனர். இன்னொரு பக்கம் மாலதியை ரவுடிகள் கத்தியால் குத்த அறிவழகனுக்கு போன் செய்யும் அவள் உன்னை நேரில் சந்திக்க வேண்டும், முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று அழைக்கிறாள்.மண்டபத்தில் ரத்னா அலங்காரம் செய்து கொண்டு வெளியே வர எல்லோரும் அழகாக இருப்பதாக பாராட்ட அவன் ஆசையுடன் அறிவழகனை சந்திக்க வர அறிவழகன் ரத்னாவை கவனிக்காமல் மாலதியை சந்திக்க கிளம்பிச் செல்ல ரத்னா வருத்தமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கண்ணீருடன் நிற்கும் அயலி.. அர்ச்சனா மீது விழுந்த கொலை பழி – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் அயலி சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் அர்ச்சனா மீது என்ன கோபம் என்பது குறித்த செல்லம்மா ஃப்ளாஷ்பேக் கதையை சொல்ல ஆரம்பித்த நிலையில் இன்று, அமைச்சரிடம் இருந்து போன் வந்ததால் நாராயணன் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்ப செல்லம்மா வேண்டாம் மனசுக்கு ஏதோ தப்பா படுது, நீங்க போக வேண்டாம் என தடுக்கிறாள். நாராயணனுக்கும் காலில் அடிபட்டு தடங்கள் ஏற்பட செல்லம்மாவின் பயம் அதிகமாகிறது.அவள் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வருவதற்குள் நாராயணன் கிளம்பிச் செல்ல அர்ச்சனா நான் போய் பார்க்கிறேன் என்று சொல்கிறாள். உங்க கூட நானும் வரேன் என்று அயலி சொல்ல அர்ச்சனா அம்மா சீக்கிரம் வந்துடுறேன் என்று சொல்லி கிளம்புகிறாள். செல்லம்மா பின்னாடியே நானும் போய் பாத்துட்டு வந்துடுறேன் என்று சொல்லி வருகிறாள். அர்ச்சனா நாராயணனை சுட்டுக் கொள்வது போல காட்சியைப் பார்த்து செல்லம்மா மயங்கி விழுகிறாள்.பிறகு கண் விழித்த அவள் நாராயணன் அருகே செல்ல நாராயணன் அர்ச்சனா அர்ச்சனா என்று சொல்லி உயிரை விட அர்ச்சனா தான் நாராயணனை கொன்றதாக செல்லம்மா புரிந்து கொள்கிறாள். அடுத்து செல்லம்மா வீட்டுக்கு வர அயலி அம்மா எங்கே என்று கேட்க கோபப்படும் செல்லம்மா அவளால தான் இந்த குடும்பமே நாசமா போச்சு என கண் கலங்குகிறாள். அயலியை பார்த்து மிரட்ட பயந்து போகும் அவள் பாட்டியைப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்.அம்மு அயலிக்கு துணையாக நிற்க ஜமுனா அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறாள். அயலி அம்மாவுக்கு என்ன ஆனது என்ன தெரியாமல் கையில் போட்டோவை வைத்துக் கொண்டு கலங்கியபடி நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கார்த்திக் தீபா திருமணம் குறித்து உடையும் உண்மை.. சாமுண்டீஸ்வரி உயிருக்கு வரும் ஆபத்து – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் ரேவதிக்கு கார்த்திக், தீபா திருமணம் குறித்து தெரிய வந்த நிலையில் இன்று, ரேவதி பரமேஸ்வரி பாட்டி பார்த்து உங்களுக்கு கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் தெரியும்ல.. அதை ஏன் சொல்லவில்லை என்று கேள்வி கேட்கிறாள். சாமுண்டீஸ்வரிக்கும் கார்த்திக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரிய வருகிறது.அவள் கார்த்தியிடம் நீங்க உங்க முதல் மனைவி இறந்த பிறகு தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க.. அப்படியே வாழ்த்து முழுவதும் தனியாக இருந்திட முடியாது.. அதனால நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்லை என்று சொல்கிறாள். மறுபக்கம் சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் சாமுண்டீஸ்வரி புதிய கம்பெனி ஓபன் பண்றா.. அவளை ஏதாவது பண்ணனும் திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரியை கொன்று விடலாம் என முடிவெடுக்கின்றனர்.அடுத்த நாள் முத்துவேல் சாமுண்டீஸ்வரியை கொல்ல முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.