விளையாட்டு
வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்… சாம்பியன் பட்டத்தை வகை சூடி அசத்தல்

வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்… சாம்பியன் பட்டத்தை வகை சூடி அசத்தல்
ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் 2025 போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி – திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படும் நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக், ஹம்பியுடன் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 2-வது ஆட்டத்தில் ஹம்பி- திவ்யா மீண்டும் மோதினர். இந்த ஆட்டம் 34-வது நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 28) டை-பிரேக்கர் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெல்பவருக்கு சாம்பியன் பட்டம் உறுதி என இருந்தது. இந்த நிலையில், மகளிர் உலகக் கோப்பை செஸ் 2025 இறுதிப் போட்டியில் கோனேரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை வாகை சூடினார். இந்த அபரா வெற்றியின் மூலம் இந்தியாவின் நான்காவது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் திவ்யா தேஷ்முக். ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியை எட்டியது திவ்யாவுக்கு இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரிவில் உலக ஜூனியர் சாம்பியனாக முடிசூட்டப்பட்டார். அதன் பிறகு 13 மாதங்களில், அவர் ஏற்கனவே பெண்கள் செஸ் போட்டியில் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு திவ்யா முக்கிய பங்காற்றி இருந்தார். அந்தப் போட்டியில் அவர் தனிநபர் தங்கத்தையும் வென்றார்.”இது விதியின் விளைவு,” என்று திவ்யா தேஷ்முக் தனது வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு கூறினார். “போட்டிக்கு முன்பு நான் இங்கே கிராண்ட்மாஸ்டர் விருதைப் பெற முடியும் என்று நினைத்தேன். இறுதியில், நான் ஒரு கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளேன்.” என்று அவர் கூறியுள்ளார்.