பொழுதுபோக்கு
15 வயதில் முதல் பாட்டு… ரஹ்மான் தெரியும், மணிரத்னம் தெரியாது: தனது முதல் பாடல் பற்றி மனம் திறந்த சின்மயி!

15 வயதில் முதல் பாட்டு… ரஹ்மான் தெரியும், மணிரத்னம் தெரியாது: தனது முதல் பாடல் பற்றி மனம் திறந்த சின்மயி!
சின்மயி ஒரு பிரபலமான இந்திய பின்னணிப் பாடகி. இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பாடியுள்ளார். தனது மென்மையான குரல் மற்றும் உணர்வுபூர்வமான பாடல்களுக்காக அறியப்படும் சின்மயி, பல விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் முத்தமழை பாடலை தீக்கு பதிலாக இசை வெளியீட்டு விழாவின்போது சின்மயி பாடியது மிகவும் வைரலானது. இதையடுத்து பிஹைன்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.இந்தியத் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வசீகரித்த பாடகி சின்மயி, தனது ஆரம்பக்கால இசைப் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, தனது முதல் பாடல் அனுபவம், அப்போது தனக்கிருந்த அறியாமை, மற்றும் திரையுலக ஜாம்பவான்களுடனான முதல் சந்திப்புகள் ஆகியவை குறித்து அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.சின்மயி தனது முதல் பாடல் அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், “அப்போது எனக்கு 15 வயதுதான். நான் மிகவும் இளமையாக இருந்தேன். யார் யார் என்று எனக்குத் துளியும் தெரியவில்லை” என்று அவர் நினைவு கூர்ந்தார். ஒரு இளம் பாடகியாக, திரையுலகின் பிரம்மாண்டம் பற்றியோ, அங்கு இயங்கும் ஆளுமைகள் பற்றியோ அவருக்கு எந்தவிதமான புரிதலும் இருக்கவில்லை என்றார். ஒரு பாடல் பாட சென்றபோது எனக்கு ரஹ்மான் சார் தெரியும், ஆனால் மணிரத்னம் சார் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர்தான் எனக்கு வரிகளை விவரித்து கூறினார் என்றார்.இசையமைப்பாளர்கள் அவருக்குப் பலவிதமான பாடல்களைப் பாட வாய்ப்பளித்தது, கடவுளின் கருணை என்று அவர் குறிப்பிட்டார். இது அவரது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்லாமல், அவரது இசை வாழ்க்கைக்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும் ஒரு புதிய சவாலாகவும், ஒரு புதிய கற்றல் அனுபவமாகவும் அமைந்ததாக கூறினார்.பாடல் வரிகளின் உணர்ச்சி மற்றும் தொனிக்கு ஏற்பப் பாடுவது மற்றும் டப்பிங் செய்வது சவாலாக இருந்ததாக சின்மயி விவரித்தார். ஒரு பாடகிக்கு, வெறும் மெட்டையும், வரிகளையும் பாடுவது ஒரு பகுதி. ஆனால், அந்தப் பாடலின் உணர்வுகளை உள்வாங்கி, அதற்கேற்ப குரலில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வருவது ஒரு கலை. டப்பிங்கில், திரையில் வரும் கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு ஏற்பத் தனது குரலை மாற்றுவது என்பது மேலும் ஒரு சவால் என்றார்.