இலங்கை
500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை

500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை
500 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட் டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது.
பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, தொழில் வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கியமை மற்றும் அந்த அமைச்சில் பணி புரிந்த பல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சரை விரைவில் கைது செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னைய ஆட்சியில் பாதுகாப்புப் பிரிவில் கடமைபுரிந்த அதிகாரிகள் பலரும் கைது செய்யப்படவுள்ளனர் என்று ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. இவர்களுள் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளும் இந்நாள் உயர் அதிகாரிகளும் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.