சினிமா
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகும் நடிகை..! யார் தெரியுமா?

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகும் நடிகை..! யார் தெரியுமா?
‘உள்ளம் கேட்குதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூஜா, மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘அட்டகாசம்’, ‘ஜே.ஜே.’, ‘நான் கடவுள்’, ‘ஓரம்போ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த பூஜா, தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாளத் துறையிலும் தன்னுடைய நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார்.இலங்கையை சேர்ந்த பூஜா, 2016-ம் ஆண்டு தொழில் அதிபர் பிரசான் டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார். தனது கணவரின் தொழிலிலும் முழு உறுதியாக ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது சில இலங்கை படங்களில் மட்டும் தோன்றியிருந்தார்.இப்போது, பூஜா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இரண்டு பிரபல இயக்குனர்கள் கதை கூறியுள்ளனர். அந்தக் கதைகள் நடிகைக்கு மிகவும் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, விரைவில் பூஜாவின் படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.44 வயதிலும் தனது அழகையும் ஈர்க்கும் கவர்ச்சியையும் இழக்காத பூஜா, மீண்டும் நடிப்புக்கு வருவதை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். அவரது கம்பேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.