பொழுதுபோக்கு
அஜித் பட நடிகருடன் மலையாள சினிமாவில் ‘பிகில்’ நடிகர் அறிமுகம்; ரிலீஸ்க்கு தயாரான புதிய படம்!

அஜித் பட நடிகருடன் மலையாள சினிமாவில் ‘பிகில்’ நடிகர் அறிமுகம்; ரிலீஸ்க்கு தயாரான புதிய படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கதிர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மதயானை கூட்டம் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை அண்மையில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்க இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரித்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இவர் நடித்த கிருமி, என்னோடு விளையாடு படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதன்பிறகு அவர் ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு தம்பியாக நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜின் அறிமுக படமான பரியேறும் பெருமாள் படத்தில் நடிகர் கதிர் நடித்து பெரும் பிரபலம் அடைந்தார். இப்படம் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, நட்சத்திர நடிகர் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த நிலையில், மீஷா என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கதிர். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கும் அறிமுகமாகிறார். எம்சி ஜோசப் இயக்கிய இப்படத்தில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மீஷா வருகிற ஆகஸ்ட் 1 ம் தேதி வெளியாகிறது. மேலும் ‛ஆர்.டி.எக்ஸ்’ பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ எனும் புதிய படத்தில் கதிர் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.