பொழுதுபோக்கு
அவருக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு; என்கிட்டேயே பாடி காட்டினார்; கேப்டன் ரசித்த இந்த பாடல் எந்த படம் தெரியுமா?

அவருக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு; என்கிட்டேயே பாடி காட்டினார்; கேப்டன் ரசித்த இந்த பாடல் எந்த படம் தெரியுமா?
விஜயகாந்த், சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான பெரியண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து’ பாடல், விஜயகாந்திற்கு மிகவும் பிடித்தமானது என்று அப்படத்தின் இசையமைப்பாளர் பரணி, நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் விஜயகாந்த். அந்த காலத்தில் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோருக்கு இணையான ரசிகர்களின் எண்ணிக்கை விஜயகாந்திற்கும் இருந்தது என்று கூறினால் மிகையாகாது. அந்த அளவிற்கு வெற்றிப் படங்களை கொடுத்து சினிமா உலகின் அசைக்க முடியாத சக்தியாக விஜயகாந்த் திகழ்ந்தார்.ஒரு ஸ்டார் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்த பின்னரும் கூட, ஏராளமான அறிமுக இயக்குநர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது தவிர நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து தனது ஆளுமையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்கத்தை, லாபகரமாக மாற்றிய பெருமை விஜயகாந்திற்கு இருக்கிறது என்று பலர் கூறியுள்ளனர்.இதேபோல், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் ஆரம்ப காலத்தில் அவர்களின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து, திரைத்துறையில் அவர்களுடைய வளர்ச்சிக்கும் விஜயகாந்த் காரணமாக திகழ்கிறார். இதற்கு செந்தூர பாண்டி, பெரியண்ணா ஆகிய படங்களை உதாரணமாக கூறலாம். இந்த இரு படங்களும் விஜயகாந்த் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. இவை, விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இந்நிலையில், பெரியண்ணா திரைப்படத்தில் வரும் ஒரு பாடல், விஜயகாந்திற்கு மிகவும் பிடித்தமானது என்று அப்படத்தில் இசையமைப்பாளர் பரணி தெரிவித்துள்ளார். அதன்படி, “பெரியண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து’ பாடல் விஜயகாந்திற்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, இந்தப் பாடலை என்னிடம், விஜயகாந்த் பாடி காண்பித்தார். பெரியண்ணா திரைப்படத்தின் பணிகள் நிறைவுபெற்ற பின்னர், ஆடியோ வெளியீட்டிற்கு திட்டமிட்டிருந்தோம்.அந்த நேரத்தில் விஜயகாந்தின் அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன். அப்போது, ‘நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து’ பாடலை விஜயகாந்த், என்னிடம் பாடி காட்டினார். என்னுடைய பாடலை விஜயகாந்த் பாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. குறிப்பாக, அவருடைய குரலில் இந்தப் பாடலை கேட்க வித்தியாசமாக இருந்தது” என இசையமைப்பாளர் பரணி தெரிவித்துள்ளார்.