இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளுக்கு வருகிறது!

அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளுக்கு வருகிறது!
இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (30.07.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்போது, அஸ்வெசும பயனாளிகள் நாளை முதல் வங்கிக் கணக்குகளில் இருந்து தங்கள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் (11 ஆயிரத்து 296 மில்லியன் ரூபாய்) உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.