Connect with us

சினிமா

இசை யுத்தம் ஆரம்பம்: அனிருத் Vs சாய் அபயங்கர்…! வெளியான தகவல் இதோ…!

Published

on

Loading

இசை யுத்தம் ஆரம்பம்: அனிருத் Vs சாய் அபயங்கர்…! வெளியான தகவல் இதோ…!

கூலி, மதராஸி, கிங்டம் என ஒரே நேரத்தில் பல பெரிய படங்களில் பிஸியாக இருக்கும் இசை sensation அனிருத் தற்போது எதிர்பாராதவிதமாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘கிங்டம்’ படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அதன் Rerecording வேலையை அனிருத் நேரடியாக செய்யாமல், தன்னுடைய உதவியாளரிடம் ஒப்படைத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.இதற்குப் பின்னணி, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள ரஜனிகாந் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்துக்கான பணிகளில் அனிருத் மூழ்கியிருப்பதாம். ஆனால், தலைவனின் படமாக இருந்தாலும் மற்ற படங்களுக்கு கவனம் குறைவாகும் விதமாக நடந்துகொள்வது நியாயமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, சாய் அபயங்கர் போன்ற இளம் இசையமைப்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இயக்குனர் அட்லி, நடிகர் சிம்பு உள்ளிட்டோரும் சாயை தீவிரமாக நம்புகின்றனர் என்பது ரசிகர்களிடையே பரவிய கருத்து.இந்த நிலைமை அனிருத் எதிர்கொள்ளும் போட்டியை மட்டுமல்ல, எதிர்கால இசை பயணத்தையும் சவாலாக மாற்றுமா? சாய் அபயங்கரின் வளர்ச்சி உண்மையிலேயே அனிருத்துக்கு சவாலா? எதிர்காலத்திலேயே பதில் தெரியும்!

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன