விளையாட்டு
இந்த தமிழக கிரிக்கெட் வீரரின் கண்களை சுற்றி 62 தையல்கள்: மகன் கூறிய ஷாக் நியூஸ்

இந்த தமிழக கிரிக்கெட் வீரரின் கண்களை சுற்றி 62 தையல்கள்: மகன் கூறிய ஷாக் நியூஸ்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன், மிரட்டல் சுழற்பந்து வீச்சாளர் என இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்துறை வித்தகராக திகழ்ந்தார். கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக 1983 உலககோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை வாகை சூடியதற்கு, ஸ்ரீகாந்த் ஆற்றி பணிகள் அளப்பரியது. இந்திய அணிக்காக அவர் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் படத்தை சாதனைகள் ஏராளாம். இந்தியாவுக்காக கடந்த 1981-ம் ஆண்டில் அறிமுகமான அவர் தனது கடைசி ஆட்டதை 1992-ம் ஆண்டு ஆடினார். மொத்தமாக 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் 2 சதம் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2062 ரன்களை எடுத்தார். இதேபோல், 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதம் மற்றும் 27 அரைசதங்களுடன் 4091 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன்பிறகு ஓய்வு பெற்றாலும், 2011 ஆம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அவர் இருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பணியாற்றிய ஸ்ரீகாந்த், தோனி கோப்பை வென்று கொடுக்க அனைத்து விதமான தனது ஆதரவுகளையும் அளித்திருந்தார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக ஸ்ரீகாந்த் கலக்கி வருகிறார். அவரை பலரும் ‘சீக்கா’ என அன்புடன் அழைப்பதுண்டு. இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த் தனது தந்தை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்களை சுற்றி 62 தையல்கள் இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், “சீக்கா-வோட (கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்) கண்ணை சுற்றி 62 தையல்கள் இருக்கிறது. ஒருமுறை வாசிம் அக்ரம் வீசிய பந்து பட்டு வலது கண்ணுக்கு மேல் 14 தையல் போடப்பட்டது. இ-கிரிக்கெட்டில் அவர் ஆடியபோது, ‘கே’ என்ற பவுலர் வீசிய பவுன்ஸ் பட்டு 20 தையல்கள் போடப்பட்டது. இப்போதும் அவர் அதற்கான மருந்துகளை எடுத்து வருகிறார். அதை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். குறிப்பாக குத்துச்சண்டை வீரர்கள் எடுக்கும் மருந்துகளை அவர் எடுத்து வருகிறார். பந்து பட்டதில் அவரின் நரம்புகள் சேதமடைந்து இருக்கிறது. அவர் பேசும் போது கூட அவ்வப்போது கண்களை சிமிட்டுவது அதனால் தான். இதுபோன்று தான் அந்தக் காலத்து கிரிக்கெட் வீரர்களை சந்தித்து இருக்கிறார்கள். நாங்கள் அதுபோன்ற எதையும் சந்தித்தது கிடையாது. அதுதான் உண்மை” என்று அவர் கூறியுள்ளார்.