பொழுதுபோக்கு
ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பளம்; கேப்டனுக்கு சிலம்பம் கற்றக்கொடுத்த அனுபவம்; 17 ஆயிரம் விருது வாங்கிய ஜாக்குவார் தங்கம்!

ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பளம்; கேப்டனுக்கு சிலம்பம் கற்றக்கொடுத்த அனுபவம்; 17 ஆயிரம் விருது வாங்கிய ஜாக்குவார் தங்கம்!
இந்திய சினமா மட்டும் இல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலு் கால் பதித்து சண்டை செய்தவர் தான் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். இவர் தற்போது ஒரு வீடியோவில் விஜயகாந்துக்கு சிலம்பாட்டம், சொல்லிக் கொடுத்த நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.கராத்தே, சிலம்பாட்டம், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில், பயிற்சி பெற்ற ஜாக்குவார் தங்கம், 1978-ம் ஆண்டு மீனா பஜார் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 12 வருடங்களுக்கு பிறகு பிரஷாந்த் ஹீரோவாக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து, கமல்ஹாசனுடன் மகராசன், அஜித் சத்யராஜ் இணைந்து நடித்த பகைவன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.விஜய், சூர்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணநை்து பணியாற்றியள்ள ஜாக்குவார் தங்கம், கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு வனிதா திரைக்கதை எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தில் பணியாற்றி இருந்தார். மேலும் சூர்யா என்ற படத்தை கடந்த 2008-ம் ஆண்டு இயக்கிய ஜாக்குவார் தங்கம், வைகாசி பொறந்தாச்சு படம் தொடங்கி கடந்த 2022-ம் ஆண்டு வெளியான பேய காணோம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இதனிடையே சமீபத்தில் குமுதம் யூடியூப் சேனலுக்கு ஜாக்குவார் தங்கம் அளித்த பேட்டியில், எம்ஜி.ஆர் இருக்கும்போதே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அவர் தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அதனால் தான் இந்த வீடு வாங்கினேன். யாராவது என்னை எங்கு இருக்குறீங்க என்று கேட்டால் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த வீடு. இந்த வீடு முழுக்க விருதுகள் இருக்கிறது. மீதமுள்ளது ஸ்டோர் ரூமில் இருக்கிறது.எனது திரை வாழ்க்கையில் இதுவரை 17000 விருதுகள் வாங்கி இருக்கிறேன். 1971-ல் சிலம்பாட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். எம்.ஜி.ஆர் பெயரில் எனக்கு கிட்டத்தட்ட 100 விருதுகள் கிடைத்துள்ளது. அதேபோல் வீடு முழுக்க இருக்கும் இன்னொரு போட்டோ கேப்டன் தான்.. அவரை சாமி என்று தான் சொல்ல, வேண்டும். 1978-ம் ஆண்டு என்னிடம் சிலம்பாட்டம் கற்றுக்கொள்ள வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். நெல்லை சுந்தர்ராஜன் என்ற ஃபைட் மாஸ்ட்ர் தான் என்னை கூட்டி சென்று அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அந்த சமயத்தில் என்னை பார்த்த விஜயகாந்த் என்ன சின்ன பையான இருக்கிகறான் என்று சொல்ல, இல்ல விஜி கம்பு சுது்துறதில் திறமைசாளி என்று அந்த ஃபைட் மாஸ்டர் சொன்னார். அப்போது நான் கம்பு சுற்றுவதை பார்த்து மிரண்டுபோன விஜயகாந்த், எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்டார். சினிமாவுக்கு என்றால் ஒரு வாரம் ஆகும் என்று சொன்னேன். ரெகுலரா கத்துக்க வேண்டும் என்றால் 6 மாதம் என்று சொன்னவுடன், அவர் ரெகுலராகவே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி கற்றுக்கொண்டார்.பொறுமையாக முறைப்படி அனைத்தையும் கற்றுக்கொண்டார். அதன்பிறகு ஒருநாள் நான் கிக் அடிக்கும்போது பார்த்துவிட்டு கராத்தே எல்லாம் தெரியுமா என்று கேட்டுவிட்டு, அதையும்கற்றுக்கொடு என்று சொல்லி கற்றுக்கொண்டார். இந்த காலக்கட்டங்களில் அவரும் நானும் நெருங்கிய நண்பர்களா மாறிவிட்டோம் என்று ஜாக்குவார் தங்கம் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். மேலும் தான் இந்தி படங்களில் பணியாற்றும்போது ஒரு நாளைக்கு ரூ5 லட்சம் சம்பவம் என்றும் ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.