இலங்கை
கொழும்பில் வர்த்தகர்கள் இருவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

கொழும்பில் வர்த்தகர்கள் இருவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!
கொழும்பிலுள்ள தொழிலதிபர்கள் இருவருக்கு எதிரான நிதி மோசடி தொடர்பில், குறித்த வர்த்தகர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
43 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான காசோலை மோசடி வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் மற்றொரு தொழிலதிபரிடமிருந்து வணிக நோக்கங்களுக்காகப் பெற்றுக்கொண்ட தொகைக்காக மதிப்பிழந்த காசோலைகளை வழங்கியதாகவும், இதன் மூலம் 43.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.