இலங்கை
சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த மதகுருவின் வீட்டை இடிக்க உத்தரவு!

சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த மதகுருவின் வீட்டை இடிக்க உத்தரவு!
தொடருந்து காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு பௌத்த மதகுரு ஒருவருக்கு அத்தனகல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட மாதத்திற்குள் அந்த இடம் அகற்றப்படாவிட்டால், அந்த இடத்தை இடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட துறவியிடமிருந்து செலவை அறவிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி மஞ்சுள கருணாரத்னவினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட துறவியின் சார்பில் முன்னிலையான சட்டத்திரணி, எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் கதின பூஜை விழா காரணமாக அவர் விலக முடியாது என்று கூறி கூடுதல் கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், மத விடயங்களின் அடிப்படையில் சட்டத்தை மீற முடியாது என்றும் வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட மாதத்திற்குள் அந்த இடம் அகற்றப்படாவிட்டால், அந்த இடத்தை இடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட துறவியிடமிருந்து செலவை வசூலிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.